த.வெ.க மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.. என்னென்ன தெரியுமா?
பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தல், நியாயமான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள், தமிழக மீனவர்கள் நலனில் மத்திய- மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என கண்டனம், ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வலியுறுத்தல், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழக அரசுக்கு கண்டனம், தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் என தீர்மானனஙகள் நிரவேற்றம்
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில், 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பரந்தூரில் விவசாய நிலங்கனை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை மத்திய-மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் மத்திய-மாநில அரசுகள் தடுக்கத்தவறி வருவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள த.வெ.க, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அவுட்சோர்சிங் முறையில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், டி. என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.