ராசிபுரம் - ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட நகைகள் பறிமுதல்
ராசிபுரம் - ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட நகைகள் பறிமுதல்புதிய தலைமுறை

ராசிபுரம் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.6.2 கோடி தங்க நகைகள் பறிமுதல்!

ராசிபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ராசிபுரம் மோகன்ராஜ் 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அகமது தலைமையிலான அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலர் சேலத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள தங்க நகை கடைகளுக்கு தனியார் கொரியர் சர்வீஸ் மூலம் நகைகளை கொண்டு சென்றுள்ளனர்.

அதிகாரிகள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இன்றி 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை அவர்கள் கொண்டுசென்றது தெரியவந்தது. இதனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

ராசிபுரம் - ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட நகைகள் பறிமுதல்
சென்னை: அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மகளுக்கு நேர்ந்த பரிதாபம்

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் ஒப்படைத்தார்.

இதுதொடர்பாக முத்துராமலிங்கம் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் திண்டுக்கல் மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு 39 பெட்டிகளில் செல்ல இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த 29 கிலோ தங்க நகைகளை ராசிபுரம் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com