Deathpt desk
தமிழ்நாடு
சென்னை: அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மகளுக்கு நேர்ந்த பரிதாபம்
அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளத்தில் மூழ்கி மகள் உயிரிழந்த நிலையில், தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிரேமா. இவரது பிறந்தநாளை கானாத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கொண்டாடியுள்ளனர். அப்போது அவரது மகள் அனு சத்யாவும் (31) அவரது தோழி சைலஜாவும் (29) அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
DEAD IMAGEPT WEP
இதைப் பார்த்த அனுசத்யாவின் தாய் பிரேமா, கூச்சல் போடவே அங்கு பணியில் இருந்த காவலாளி விஜய் நீச்சல் குளத்தில் குதித்து அனுசத்யாவையும் சைலஜாவையும் மீட்டுள்ளார். ஆனால், அனுசத்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சைலஜா, ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கானதூர் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.