ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்pt web

தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. வருண் குமார் ஐ.பி.எஸ் DIG ஆக பதவி உயர்வு

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில், 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு.
Published on

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,

தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆயுதப்படை ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி அதே பொறுப்பில் டிஜிபியாக நீடிப்பார்.

நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன் டிஜிபியாக பதவி உயர்வு கிடைத்து அதே பொறுப்பில் நீடிப்பார்.

தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடே டிஜிபி யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Attachment
PDF
Police Note 31
Preview

திருச்சி மாவட்ட SP., யாக இருந்த வருண் குமார் ஐ.பி.எஸ் DIGயாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக DIGயாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் கிழக்கு இணை ஆணையராக இருந்த சரோஜ் குமார் காவல்துறை தலைமையக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் மேற்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் கிழக்கு இணை ஆணையராக நியமனம்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
”படம் எடுக்குறது தான் உன்வேலை.. எப்படி பார்க்கணும்னு சொல்லி கொடுக்காத” - ரசிகர்கள் குறித்து பாலா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com