தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு
இன்றைக்கு ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 526 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா நோய்ப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 526 பேர் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோயாளிகளின் எண்ணிக்கை மொத்தம் 6,535 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் 6,009 ஆக இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை கூடியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தளவில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு 44 ஆகப் பதிவாகியுள்ளது. இதில் சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் 4,464 பேர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் குணமடைந்து 219 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் மேலும் 279 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் சென்னையில் மட்டும் 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அளவில் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளான ஆண்களின் எண்ணிக்கை 4495 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 2038 ஆகவும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 02 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோயம்பேடு சந்தை மூலம் 1867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.