கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு
Published on

கோவையில் ஒரே வீட்டில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேசமயம் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தப்பட்டி அருகே கடந்த 6 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் அந்தோணி. வயது 38. இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்தோணிக்கு சோபனா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், ஒன்னரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதுதவிர அந்தோணியின் அம்மா புவனேஸ்வரி என 5 பேரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே இன்று மாலை வரை அந்தோணி வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத நிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்தோணியின் வீடு உள்ளே சென்ற பார்த்தபோது, அந்தோணி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். அந்தோணியின் மனைவியான சோபா, மற்றும் அவர்களின் இரு குழந்தைகள், அந்தோணியின் தாயான புவனேஸ்வரி ஆகிய 4 பேரும் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களின் கையில் ஒரு கடிதம் சிக்கியது. அந்தோணி எழுதிய அந்தக் கடிதத்தில், 12 வருடம்தான் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தும் முதுகுவலி சரியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனியாக இறக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அந்தோணி, தங்களுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்தோணி தூக்கில் தொங்குவதற்கு முன்பு, வீட்டில் உள்ள அனைவருக்கும் விஷம் வைத்தது தெரியவந்துள்ளது. 5 பேரின் உடல்களை கைப்பற்றியுள்ள கருமத்தப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com