காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: மதுரையில் சோகம்

மதுரை திருமங்கலம் அருகே காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை திருமங்கலம் நான்கு வழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் உள்ள சாலையில் எதிரே வந்த மினி கண்டெய்னர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜேம்ஸ் மார்ட்டின், சாம் டேவிட்சன், கமலேஷ் ஆகிய மூவர் மற்றும் கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் செல்வகுமார் என 4 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற கள்ளிக்குடி போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com