தென்மாவட்டங்களில் பெய்துவரும் அதிகனமழை! 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்!

தென்மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையை எதிர்கொள்ள உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்PT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகனமழை பெய்து வரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அவர் நியமித்துள்ளார்.

மழை
மழைpt web

அதன்படி, கன்னியாகுமரிக்கு நாகராஜனும், நெல்லைக்கு செல்வராஜும், தூத்துக்குடிக்கு ஜோதி நிர்மலாவும், தென்காசிக்கு சுன்சோங்கம் ஜகத் சிருவும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக ஸ்டாலின்
தூத்துக்குடியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

தொடர் கனமழையால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதன் நீர்வரத்து வெளியேற்றம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரண முகாம்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com