தூத்துக்குடியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழை கடற்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இந்நிலையில், நேற்று இரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

flood
floodpt desk

இதனால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரிய தாழை மீனவ கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக மேலத்தெரு, சேவியர் காலனி போன்ற பகுதிகளில் வீடுகள் மற்றும் தெருக்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com