\
தீபாவளி
தீபாவளி முகநூல்

தீபாவளி கொண்டாட்டம்.. பட்டாசு விபத்தால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - மருத்துவமனைகளில் சிகிச்சை!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் சிறிய பட்டாசு விபத்துக்களால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் இரவில் பலவண்ண மத்தாப்புகளைக் கொளுத்தி
மகிழ்ந்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் சிறிய பட்டாசு விபத்துக்களால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தீபாவளி
நவ. முதல் வார இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்திற்கு மிக கனமழை இருக்குமா?

தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டறைக்கு பொதுமக்களிடம் இருந்து128 அழைப்புகள் வந்த நிலையில், பட்டாசு வெடித்ததில் தீப்பிடித்தது தொடர்பாக 97 அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. பட்டாசுகள் இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்து நிகழ்ந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com