மாதிரிப்படம்pt web
தமிழ்நாடு
நவ. முதல் வார இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்திற்கு மிக கனமழை இருக்குமா?
நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது
நவம்பர் முதல்வாரத்தில் தென்மெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி நகரும் பட்சத்தில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.