திருப்பூர்: சமுதாய நலக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கொழுமத்தில் தனியார் சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
death
deathpt desk

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் சமுதாய நலக்கூடம் ஒன்று இருந்துள்ளது. நேற்று முழுவதும் தொடர் மழை பெய்த காரணத்தால் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதில், பேருந்துக்காக காத்திருந்த கொழுமத்தைச் சேர்ந்த முரளி ராஜா, மணிகண்டன், கௌதம் ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

building collaped
building collapedpt desk

இதையடுத்து பலத்த காயமடைந்த அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது .

death
தி.மலை: செங்கம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி

இது குறித்து குமரலிங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சமுதாய மக்களால் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. அண்மையில் இந்த கட்டடத்த்தை சீரமைக்க அச்சமுதாய மக்களால் முடிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று காலை இடிந்து விபத்து ஏற்பட்டுவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com