கன்னியாகுமரி: மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே மின்சாரம் பாய்ந்து 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்த சேம் என்பவரின் வீட்டின் அருகேயுள்ள தகர மேற்கூரையில் மின்வயர் அறுந்து விழுந்துள்ளது. இதனையறியாமல் அவரது மகன் அஸ்வின் இரும்பு கம்பியால் தகர மேற்கூரையை நகர்த்தியுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆதிரா, அஸ்வின், ஜெயசித்ரா
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆதிரா, அஸ்வின், ஜெயசித்ரா

அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அலறல் சத்தம் கேட்டு தாய் ஜெயசித்ரா, சகோதரியான 8 மாத கர்ப்பிணி ஆதிரா ஆகியோர் ஓடிச்சென்று காப்பற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து மின்இணைப்பை துண்டித்து அதன்பிறகு மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர்.

கன்னியாகுமரி மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர்
மழை நேரத்தில் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை! #VisualStory

ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மூன்று பேரின் உடல்களை மீட்டு திருவட்டார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com