சென்னை | இருசக்கர வாகனம் மீது மோதிய கார்... 6 வயது மகனுடன் தாய், தந்தையும் மரணித்த சோகம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருச்சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள்
சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள்pt desk

செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் தனசேகரன் என்பவர் தனது மனைவி மற்றும் 6 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக பின்னால் வந்த கார், அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனம் தூக்கி வீசப்பட்டு தனசேகரன் மற்றும் அவரது மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள்
தி.மலை: செங்கம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி
bike accident
bike accidentpt desk

தொடர்ந்து, படுகாயமடைந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் வினய் பாபுயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com