தமிழ்நாடு
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு ; 3 அறைகள் தரைமட்டம்
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு ; 3 அறைகள் தரைமட்டம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் சூரிய பிரபா என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் ஆலைக்கு சென்ற நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் 3 அறைகள் தரைமட்டம் ஆன நிலையில் தொழிலாளர்கள் வள்ளியம்மாள், விஜயகுமார் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.