ராமநாதபுரம்: பனை மரத்தில் கார் மோதிய விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

சாயல்குடி அருகே சாலை விபத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் சாயல்குடி சாலை விபத்து
ராமநாதபுரம் சாயல்குடி சாலை விபத்துபுதிய தலைமுறை

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது மாலிக். இவர் தனது குடும்பத்தினருடன் குற்றாலம் சென்று விட்டு சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது சொகுசு கார், சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில், காரில் பயணம் செய்த பரிதாபீவி (58), அப்ரின் பாத்திமா (3), சீனி பர்கான் (8 மாத குழந்தை) உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Car accident
Car accidentpt desk

படுகாயமடைந்த முகமது மாலிக், அவரது மனைவி அகமது நிஷா, மகள் அஸ்ரின் பாத்திமா உள்ளிட்ட மூன்று பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சாயல்குடி காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் சாயல்குடி சாலை விபத்து
சுறா தாக்குதல்.. கையைக் கடித்துச் சென்ற கொடூரம்.. ’பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ பட நடிகர் மரணம்!

குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று திரும்பிய போது இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் வாலிநோக்கம் மீனவ கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com