வாட்டி வதைக்கும் வெயில்; வெப்பவாதத்தால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு

கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட வெப்பவாதத்தால், நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெப்பம்
வெப்பம்புதிய தலைமுறை

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், நேற்று பல்வேறு மாநிலங்களில் ஹீட் ஸ்ரோக் எனப்படும் வெப்பவாதத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில், வெப்பவாதத்தினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் ஐந்து பேரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு பேரும் வெப்ப வாதத்தினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், தங்கள் தாய் மற்றும் பாட்டிக்கு மருந்துவாங்க மருந்தகத்திற்கு சென்ற இரண்டு சிறுவர்கள், ஹீட் ஸ்ரோக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெப்பம்
அதிகரிக்கும் வெப்ப அலை! கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் வெப்பநிலை எப்படி இருக்கு?

தமிழ்நாட்டில் 18 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருத்தணி, வேலூர், திருப்பத்தூர், மதுரை, நாகை, தஞ்சாவூர், பரங்கிபேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் வெயில் சதமடித்தது. புதுச்சேரி, காரைக்காலிலும் 100 டிகிரி வெயில் பதிவானது.

அதிகளவாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியது. சென்னை மீனம்பாக்கம், வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவானது. இதனால், பகல் வேளையில் வெளியில் சென்ற மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே, தமிழகத்தில் வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் ஒன்று முதல் 2 டிகிரி குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம்
சென்னை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர்..வெளியேவந்து பக்கெட் தண்ணீரில்விழுந்த 11 மாத குழந்தை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com