குரூப் 4 தேர்வு
குரூப் 4 தேர்வுமுகநூல்

குரூப் 4 தேர்வு எழுதிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!

குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.
Published on

குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 11,48,019 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 2,41,719 பேர் தேர்வு எழுதவில்லை.

அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற் முடிந்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், குரூப் 4 தேர்வுக்கான விடைகுறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள்தாங்கள் அளித்த பதில் சரியானதா என்று அறிந்துகொள்ள இந்த விடைகுறிப்பை பயன்படுத்தலாம். இதனை www.tnpsc.gov.in – என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

குரூப் 4 தேர்வு
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை | குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ5 லட்சம் சன்மானம் என அறிவிப்பு

கூடுதலாக, தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும். உத்தேச விடைகளுக்கான மறுப்புகள்/ கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய வழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அஞ்சல், மின்னஞ்சல் வழியாக பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. இதனை 28.07.2025 அன்று மாலை 5.45 மணிக்கு முன்பு அளிக்கவேண்டும் . இதன்பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com