திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமைweb

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை | குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ5 லட்சம் சன்மானம் என அறிவிப்பு

திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி 10 நாட்கள் கடந்த நிலையில், குற்றவாளியை கைதுசெய்ய முடியாமல் காவல்துறையினர் திண்டாடிவருகின்றனர்.
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி சனிக்கிழமையன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினான். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குற்றம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைதொடர்ந்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து மாவட்ட எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உட்பட 8 தனிப்படைகள் அமைத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைpt

ஆனால் சிறுமிக்கு கொடுமை நடந்து 10 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறிவருகின்றனர்.

இந்த சூழலில் குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் என்ற அறிவிப்பை காவல்துறை அறிவித்துள்ளது.

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
ஆசிரியைக்கு வரதட்சணை கொடுமை| காவலர் பூபாலன் கைது.. தந்தை, மகன் 2 பேரும் பணியிடை நீக்கம்!

5 லட்சம் சன்மானம் அறிவிப்பு!

திருவள்ளூரில் 8 வயது சிறுமியை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை, சிசிடிவி ஆதாரம் கொண்டு தேடிவந்த காவல்துறையினர் ஆந்திர எல்லையிலும் வாகன சோதனை நடத்தினர்.

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை

குற்றவாளி சார்ந்த புகைப்படம் மற்றும் சிசிடிவி வீடியோ அனைத்தையும் வெளியிட்டபிறகும், அந்த கொடூர நபரை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தசூழலில் குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
”நடிகரோ, நாட்டை ஆளும் அதிபரோ.. யாராக இருந்தாலும்..” - தவெக தலைவர் விஜய் மீது திமுக வைஷ்ணவி புகார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com