காஞ்சிபுரம் - 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்கவுண்டர்
என்கவுண்டர்முகநூல்

செய்தியாளர் - இஸ்மாயில்

-----

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின்போது ரவுடிகள் தாக்கியதில் படுகாயமடைந்த 2 காவலர்கள், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காஞ்சிபுரம் பிள்ளையார் கோவில் பகுதியில் ரவுடி பிரபா என்பவரை கொலை செய்த வழக்கில், ரவுடிகள் ரகு என்கிற ரகுவரன் மற்றும் கருப்பு பாஷா என்கிற ஹசைன் ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த மூன்று ரவுடிகளும், கூட்டாக இணைந்து பல சட்டவிரேத செயல்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. பின் சில பிரச்னைகள் காரணமாக தனித்தனியாக பிரிந்தவர்கள், 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரனை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

என்கவுண்டர்
இயக்குனர் விஜய்யிடம் மதுபோதையில் தகராறு செய்த இளைஞர்

இந்நிலையில் இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் ரயில் நிலையம் பகுதியில் தலைமறைவாகி உள்ளார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு தேடுதல் வேட்டையை நிகழ்த்திய காவல்துறையினர், அவர்களை மடக்கிப்பிடித்துள்ளனர். இதனால் சிக்கியவர்கள் காவல் துறையினரை தாக்கியுள்ளனர்.

மேலும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். இதனால் அவர்களை என்கவுண்டரில் சுட்ட போலீசார் அதன்பிறகு அவர்களை காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே இருவரின் உயிரும் பிரிந்துவிட்டது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் தாக்கியதில் பாதிக்கப்பட்ட இரண்டு காவலர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com