இயக்குனர் விஜய்யிடம் மதுபோதையில் தகராறு செய்த இளைஞர்

மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் தகராறில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
al vijay
al vijaypt web

இயக்குநர் ஏ.எல்.விஜய் தற்போது அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது.

அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1
அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1

இந்நிலையில் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் இன்று காலை இயக்குனர் ஏ.எல்.விஜய் படப்பிடிப்பிற்காக தனது நான்கு சக்கர வாகனத்தில் சென்றபோது அதிகளவு மது போதையில் வந்த இளைஞர், இயக்குனர் விஜய்யின் நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடியை இடித்தது மட்டுமில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து விஜய்யுடன் இருந்த உதவி இயக்குனர்கள் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

இதனையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், உதவி இயக்குனர்களிடம் புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் வருவதைக் கண்டு மது அருந்தி இருந்த நபர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் அந்நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com