3வது நாளாக தொடரும் மீட்புப்பணி.. வேளச்சேரியில் 40 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் நிலை என்ன?

“2 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், உள்ளே சிக்கியிருப்பவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? அல்லது உயிரிழந்துவிட்டார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை”
velacherry
velacherrypt

மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முன் தினம் வரை சில நாட்களாக சென்னையில் மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள 5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலயத்தின் அருகே உள்ள கிரீன் டெக் சொலியூசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கட்டுமானத்திற்காக 40 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதீத மழயால், பள்ளம் நிரம்பிய நிலையில், அருகே இருந்த ஊழியர்கள் தங்கும் தற்காலிக அறைகள் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்தது.

40 அடி ஆழம் கொண்ட இந்த பள்ளத்தில் 4 ஊழியர்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், காயங்களுடன் 2 பேர் மீட்கப்பட்டனர். மேலும் இரண்டு பேரின் குடும்பத்தினர், அவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பள்ளத்தில் இவர்கள் சிக்கி 3வது நாள் ஆகும் நிலையில், மீட்புப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுமார் 64 அடிக்கு தோண்ட திட்டமிடப்பட்ட இடத்தில் 50 அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. அதேபோல் 50 அடி அகலமும் கொண்ட பரப்பில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இயல்பாகவே இது தாழ்வான பகுதியாக இருக்கும் நிலையில், குடியிருப்பு கண்டெய்னரானது மழைநீரோடு உள்ளே வீழ்ந்துள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகளின் மேற்பார்வையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகிறது. 2 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், உள்ளே சிக்கியிருப்பவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? அல்லது உயிரிழந்துவிட்டார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

2 பேரில் ஜெயசீலன் என்பவரும் சிக்கியுள்ள நிலையில், அதிகாலையில் மோட்டார் விடவே கணவனை அழைத்ததாகவும், அதனால்தான் அவர் வந்து பள்ளத்தில் சிக்கியதாகவும் அவரது மனைவி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

velacherry
மிக்ஜாம் புயல் பாதிப்புகள் - “இயல்புநிலை திரும்பும் வரை நிவாரணப் பணி தொடரும்” - பிரதமர் மோடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com