Govt schoolpt desk
தமிழ்நாடு
நெல்லை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே மோதல்; இருவர் காயம் - போலீசார் விசாரணை
நெல்லையில் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்த நிலையில், 13 மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பள்ளி கழிவறை சுவற்றில் குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தி எழுதியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
clashpt desk
இதில், இரு மாணவர்களுக்கு லேசான ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான போலீசார், அந்த பள்ளியில் பயிலும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.