காஞ்சிபுரம்| நாய் கடித்ததை பயந்து பெற்றோரிடம் மறைத்த சிறுவன்.. 1 மாதம் கழித்து உயிரிழப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாய் கடித்ததை பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்த 15 வயது சிறுவன் சபரிவாசன், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15). இச்சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, வெறி நாய் ஒன்று கடித்ததில் லேசான காயங்களுடன் சபரிவாசன் உயிர்தப்பியுள்ளார்.
நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறினால் அடிப்பார்கள் என எண்ணிய சிறுவன் சபரி வாசன் நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளார்,
மரணித்த சிறுவன்..
இதனுடைய கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிவாசனின் செயல் சற்று மாறுபட்டு காணப்பட்டு வருவதாக அவரை தந்தை பாஸ்கர் அவனை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் ரேபிஸ் நோய் தலைக்கு ஏறி மிகவும் பரிதாபக்குரிய நிலையில், சபரிவாசன் நாய் போன்று செயல்பட்டதால் உடனடியாக சபரி வாசனை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிலகாலம் சிகிச்சை அளித்தும் கூட உடல்நிலை சீராகாததால் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் சபரிவாசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

