12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது.
12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு
12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுபுதிய தலைமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது.

12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு
கற்பி-ஒன்று சேர்-புரட்சி செய்! அம்பேத்கர் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்- சர்வதேச கல்வி தினம்!

இத்தேர்வு வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளிகளில் இயற்பியல், வேதியியல் ஆய்வுக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகளில் வழங்கப்படும் அக மற்றும் புற மதிப்பெண்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்று அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com