கற்பி-ஒன்று சேர்-புரட்சி செய்! அம்பேத்கர் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்- சர்வதேச கல்வி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.
சர்வதேச கல்வி தினம்
சர்வதேச கல்வி தினம்முகநூல்

சர்வதேச கல்வி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் கல்வியின் முக்கியத்துவத்தினை உணரவைக்கும் வகையிலும், அதனை எடுத்துரைக்கும் வகையிலும் 59 நாடுகளின் ஒருங்கிணந்த முடிவால் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டிற்கான நோக்கமாக “நிலையான அமைதிக்கான கற்றல்” என்ற நோக்கத்தினை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 , 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

ஏன் அவசியம்?

  • பாகுபாடு, அதனால் எழும் வெறுப்பு, இனவெறி, தீண்டாமை, வன்முறை போன்றவற்றை எல்லாம் ஒழிக்கவல்ல மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி.

  • ” வாலினும் கூர்மையானது பேனாவில் முனை” .. இதன்படி, வாலின் கூர்மையான முனையை காட்டிலும் பேனாவில் இருந்து பிறக்கும் எழுத்துகளுக்கு உள்ள வலிமை நினைக்கவல்ல எதையும் மாற்றவல்ல திறம் படைத்தது.

  • ஒருவர் கற்ற கல்வி அவருக்கு மட்டும் மல்ல அவரின் சந்ததியை எழுச்சிக்கும், அக்குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

  • சமுதாய முன்னேற்றம் அந்நாட்டின் பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும். புது புது கண்டுப்பிடிப்புகள் நிகழ்த்தபடும், ஒடுக்குமுறையாலும் சாதியின் பெயராலும் கட்டப்பட்ட கட்டுகதைகள் உடைக்கப்படும், அடிமைத்தனம் ஒழிக்கப்படும், செயல்களில் பகுத்தறிவு பிறக்கும், தனி மனித ஒழுக்கம் பெருகும், மனித நேயம் உருவெடுக்கும்.

  • இவை அனைத்தும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும். இதனால் உலக நாடுகளுடன் வணிக ரீதியான தொடர்பும் , நாட்டின் பொருளாதாரமும் உயர்த்தப்பட்டு, நாட்டுக்கென்று தனி அந்தஸ்து உயரும்...

  • இவை அனைத்தும் கிடைக்கபெற வேண்டுமானால் கல்வி அனைவருக்கும் சமமாகவும், பாரபட்சமின்றியும் கிடைக்கப் பெற வேண்டும்.

தரவு ஒன்றின்படி, ஆப்கனில் பள்ளி செல்லும் வயதில் உள்ள 80 சதவீத பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டும், தலிபான்களின் ஆட்சிகாலத்தில் பெண் கல்விக்கு எதிரான நடமுறைகளும் உருவெடுத்துள்ளன.

அம்பேத்கரின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்!

ஒடுக்குமுறை போன்றவற்றை உடைத்தெரியும் சக்தி கல்விற்கு மட்டும்தான் என்று நம்பியவரும் அதனை தன் வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டியவருமான அம்பேத்கர் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் இன்றளவும் பேசப்படும் ஒன்று!

பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வகைப்படுத்தும் சமுதாயத்தில் ஒடுக்குமுறை, தீண்டாமை என்று தன்னை புறம் தள்ளிய சமுதாயத்திற்கே அரசியல் அமைப்பு சட்டத்தினை, கல்வியின் துணைக்கொண்டு வடிவமைத்து கொடுத்தவர். நாடுகள் பல சென்று பட்டம் பல படித்த சட்டமாமேதை, அரசியல் புரட்சியாளர், அதுமட்டுமல்ல கல்வியின் புலத்துக்கு இவர் ஆற்றிய பங்கு ஏராளானம்..

அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். 

இன்றளவும் சமுதயாத்தில் ஒதுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்காக அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு அவர்களின் வாழ்க்கையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் வரிகள்:

” உங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கு கல்வி கொடுங்கள், பாரம்பரிய வணிக நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தாதீர்கள்.”

“மாணவர்கள்.. ஒவ்வொரு குடியேற்றத்திற்கும் சென்று மக்களின் அறியாமை மற்றும் முட்டாள்தனமான நம்பிக்கைகளை அகற்ற வேண்டும், அப்போதுதான் மக்கள் தங்கள் கல்வியால் சில நன்மைகளைப் பெறுவார்கள். தேர்வில் தேர்ச்சி பெற மட்டுமே உங்கள் அறிவைப் பயன்படுத்தினால் போதாது. நமது அறிவை நமது சகோதர சகோதரிகளின் முன்னேற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும்; அப்போதுதான் இந்தியா முன்னேறும்”

”மாணவர் நிலையிலேயே உங்கள் தகுதியை அதிகரிக்க வேண்டும்.

” படித்தால் பிழைப்பீர்கள்”

சர்வதேச கல்வி தினம்
நெருங்கும் மக்களவை தேர்தல்... திமுக - காங்கிரஸ் 28ம் தேதி பேச்சுவார்த்தை

” கல்வி என்பது புலியின் பால், அதைக் குடிப்பவர் கண்டிப்பாக புலியைப் போல் உறுமுவார்.”.

"பெண்கள் அடைந்த முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்."

“உண்மையான கல்வி நம்மை பயமுறுத்துவதற்குப் பதிலாக பகுத்தறிவுள்ளவர்களாக மாற்றும்.”

”உங்களிடம் இரண்டு ரூபாய் இருந்தால், ஒரு ரூபாயை உணவுக்கும் , ஒரு ரூபாயயை புத்தகத்திற்கும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உணவு உங்களுக்கு வாழ உதவும், ஆனால் எப்படி வாழ வேண்டும் என்பதை புத்தகம் கற்றுக்கொடுக்கும்.

”நீ கற்ற கல்வி உன் சமூகத்திற்கு பயன்படவில்லை என்றால் நீ இருப்பதை விட இறப்பதே மேல்

இந்த வரிகளே போகும் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் என்று!

ஆகவே கல்வி என்பது நமது பிறப்புரிமை! உரிமைகள் பறிக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டுமானால் நிச்சயம்.... கல்வி அனைவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும்! சமமாக கிடைக்கப்பெற வேண்டும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com