10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முகநூல்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. 9 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிக மாணவ, மாணவியர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர்.

செய்தியாளர்: சுரேஷ்குமார்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12,616 பள்ளிகளில் படிக்கும் 4,57,000-க்கும் அதிக மாணவர்களும், 4,52,000-க்கும் அதிக மாணவிகளும், மாற்று பாலினத்தவர் ஒருவரும் என 9,10,000-க்கும் அதிகமானோர் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்.

பொதுத்தேர்வு
பொதுத்தேர்வுகோப்புப்படம்

இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் பணியில் 48,700 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
ஓபிஎஸ் முதல் செல்வகணபதி வரை.. வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய பிரபலங்கள்!

தேர்வு முறையாக நடத்தப்படுவதை கண்காணிக்க 3,350 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலையான கண்காணிப்பு படையினர் 1,241 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் மொழிப்பாடமும், மார்ச் 28-ல் ஆங்கிலமும், ஏப்ரல் 1 ல் கணிதத்தேர்வும் நடைபெறுகிறது. ஏப்ரல் 4 ல் அறிவியல், ஏப்ரல் 6 ல் விருப்ப மொழிப்பாடம், ஏப்ரல் 8 ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு நடைபெறும் நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்து தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...

“10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவுள்ள என் அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள். நீங்கள் பயின்ற ஒரு அறைதான், நண்பர்களோடும், ஆசிரியர்களோடும் மகிழ்ச்சியாக உரையாடிய ஒரு அறைதான் உங்களுக்கான தேர்வு அறை. உங்களின் ஆசிரியர்கள்தான் தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிTwitter

உங்களின் நண்பர்கள்தான் உங்களைச் சுற்றி அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். அது உங்களின் இடம். ஆகவே எதை நினைத்தும் பதற்றம் அடையாதீர்கள். பயம் கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். அதுதான் உங்களுக்கான வெற்றியைத் தேடித் தரும். மகிழ்ச்சியோடு சென்று வாருங்கள். வாழ்த்துகள்” என்றுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com