\
பொன்னேரி
பொன்னேரிபுதிய தலைமுறை

பொன்னேரி: சிக்கன் பிரியாணி கடையில் சாப்பிட்ட 10 பேருக்கு உடல்நலக்குறைவு!

பொன்னேரியில் பிரபல தனியார் பிரியாணி கடையில் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ் வாங்கி உட்கொண்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Published on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரபல தனியார் நிறுவனத்தின் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த பிரியாணி கடையில் அசைவ உணவின் தரம் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கடையில் பிரியாணி மற்றும் சிக்கன் லெக் பீஸ் உட்கொண்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புரட்டாசி மாதம் பிறப்பை முன்னிட்டு கடந்த திங்களன்று ஏராளமானோர் இந்த கடையில் வாங்கிய அசைவ உணவு வாங்கி சென்றதாகவும், அவை தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் அதனால் உபாதைகளை சந்தித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

பொன்னேரி
சேலம்: பாராலிம்பிக் பதக்க நாயகன் மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

மேலும், பெருமளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பாக உணவு பாதுகாப்பு துறையினர் இந்த பிரியாணி கடையில் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com