\
மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு - மலர்கொத்து கொடுத்த ஆட்சியர்
மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு - மலர்கொத்து கொடுத்த ஆட்சியர்pt desk

சேலம்: பாராலிம்பிக் பதக்க நாயகன் மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
Published on

செய்தியாளர்: சேலம் மோகன்ராஜ்

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன், வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டிக்கு திரும்பிய மாரியப்பனுக்கு, கிராம மக்கள் நேற்று உற்சாக வரவேற்பளித்தனர்.

மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்புpt desk

சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்க, தீவட்டிப்பட்டி முதல் பெரிய வடகம்பட்டி வரை திறந்தவெளி வாகனத்தில் சென்ற மாரியப்பனை, ஊர்மக்கள் வாழ்த்தினர். தடகள வீரர் மாரியப்பனின் வருகையால், மேளதாளம் முழங்க, பட்டாசுகள் சத்தம் விண்ணை பிளக்க, ஊரே களைகட்டியது.

மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு - மலர்கொத்து கொடுத்த ஆட்சியர்
வாவ்வ்! 124மீ தூரம் பறந்த சிக்சர்; மிரட்டிய 21வயது WI வீரர்! டி20 கிரிக்கெட்டின் Biggest Six? #Video
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com