சேலம் - ராமர் கோவில் விழா விவகாரம்; தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பாஜகவினர் 10 பேர் கைது

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை ஒளிபரப்புவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக பாஜக வினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள்
தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள்PT

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை சேலம் அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் வளாகத்தில் சிறியளவிலான திரையில் ஒளிபரப்ப பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு முறையான அனுமதி பெறாத காரணத்தால் செயல் அலுவலர் சங்கர் அந்த ஒளிபரப்பை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். அப்போது அங்கிருந்த பாஜகவினர் செயல் அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செயல் அலுவலரை பாஜகவினர் தாக்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக செயல் அலுவலர் சங்கர் காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 10 பேர் மீது காவல்துறையினர் அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள்
தூத்துக்குடி - அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் மீது பெண் பரபரப்பு புகார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com