தூத்துக்குடி - அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் மீது பெண் பரபரப்பு புகார்

தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங் மீது அவரது முன்னாள் காதலி பண மோசடி புகாரளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங் மீது மோசடி புகார்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங் மீது மோசடி புகார்புதிய தலைமுறை

தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங் என்பவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் 2 ஆண்டுகள் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த சுகந்தி என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீடு வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 35 சவரன் தங்க நகைகளை சுகந்தியிடமிருந்து ஜெபசிங் பெற்றுள்ளார். ஆனால் வாங்கிய வீட்டை சுகந்தியின் பெயரில் அல்லாமல் தமது பெயரிலேயே அவர் பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங் மீது மோசடி புகார்
”ட்ரெஸ் இல்லாம துன்புறுத்துனாங்க” - திமுக MLA-ன் மகன், மருமகள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இதனிடையே அந்த வீட்டை விற்பனை செய்வதற்காக ஜெபசிங்கின் தந்தையான அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் முன்பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெபசிங் பெற்ற பணம் மற்றும் நகைகளை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றுவதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தென்பாகம் காவல் நிலையத்தில் சுகந்தி புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com