பெங்களூர் டூ தேனி - ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 10 பேர் கைது; சிக்கியது எப்படி?

தேனியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள் PT WEP

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகர் பகுதிக்குட்பட்ட இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் இடையே போதை மாத்திரை பழக்கம் அதிகரித்து வருவதாகவும், ஆங்காங்கே அவர்களுக்குப் போதை மாத்திரைகளைச் சிலர் விற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் குமாரபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அந்தப்பகுதியில் சந்தேகப்படும் படியாகக் கூட்டமாக இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முயன்ற போது அவர்கள் தப்பியோட முயன்றுள்ளனர்.

போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள்
போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள்

இதனைச் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் சக்கம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி , டி.புதூர் பகுதிகளைச் சேர்ந்த கோகுல் , சியாம்குமார், கௌதம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் என்பதும், தொடர்ச்சியாகத் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் மும்பையில் ஆர்டர் செய்து, அதனைத் தேனி தனியார் கண் மருத்துவமனைக்குப் பின்புறமாக கொரியர் மூலம் வரவழைத்து அவற்றை இளைஞர்களுக்கு

பெங்களூரிலிருந்து இந்த மாத்திரைகள் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. தேனியின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தற்போது 10 மாத்திரைகள் கொண்ட அட்டை 423 ரூபாய் என ஆர்டர் செய்து அதனை வாங்கி ஒரு மாத்திரையை 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்
சீர்காழி: இறந்த தந்தையின் உடலை சாலையின் நடுவில் புதைத்த மகன் - அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி!

மேலும் இரண்டு மாத்திரைகளை குளுக்கோஸ் வாட்டர் பயன்படுத்தி ஊசி மூலம் உடலில் செலுத்தினால் மூன்று முதல் நான்கு மணி நேரம் போதை இருப்பதாகக் கூறி விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

போதை மாத்திரைகள்
போதை மாத்திரைகள்

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 10 அவர்களிடம் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 700 போதை மாத்திரைகள், மூன்று ஊசிகள், இரண்டு குளுக்கோஸ் வாட்டர் பாட்டில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 10 பேரையும் சிறையில் அடைத்தனர்.

இது போல் வேறு பகுதிகளிலும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்
வேலூர்: பேங்க் சென்று திரும்புவோரிடம் நூதன திருட்டு.. தனிப்படை அமைத்து தட்டித்தூக்கிய போலீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com