மழை, வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு.. ஸ்ரீவைகுண்டம், புன்னக்காயல் பகுதிகளின் நிலவரம் என்ன?

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், புன்னக்காயல் பகுதிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் காணலாம்.

பெருமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகள்தான். கருங்குளம், ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் தண்ணீர் வடிந்தாலும், அதன் பாதிப்பு இன்னும் குறையாமல்தான் உள்ளது. வீடுகள் பலவற்றையும் வெள்ளம் வாரிச்சுருட்ட, 70 சதவீத மக்கள் உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவை அரசு மூலமாகவும், தன்னார்வலர்கள் உதவியுடனும் கிடைக்கிறது. ஆனால் சில குடியிருப்புகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை. முதற்கட்டமாக நடமாடும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com