மல்யுத்த விவகாரம்: வினேஷ் போகத்தும் விருதுகளைத் திருப்பியளிக்க முடிவு!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்ட்விட்டர்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த டிச.21ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. தேர்தலில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் வீரங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். அதேநேரத்தில், சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டுவிலகுவதாக அறிவித்தார்.

அவரைத்தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி, கடந்த டிசம். 22ஆம் தேதி விருதை பிரதமர் இல்லத்தின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றார். இவர்களைத் தொடர்ந்து தங்களுடைய விருதுகளைத் திரும்ப ஒப்படைப்பதாக சிலர் அறிவித்தனர். மேலும், சிலர் விளையாட்டில் இருந்து விலகுவதாகக் கூறி தொடர்ந்து மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

வினேஷ் போகத்
மல்யுத்தம்: தொடரும் பிரச்னைகள்.. திடீரென கலைத்த மத்திய அரசு.. குற்றஞ்சாட்டும் பிரியங்கா காந்தி!

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் தன்னுடைய விருதுகளை, மத்திய அரசிடம் திரும்ப அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில், “நான் எனது மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பியளிக்கிறேன். இந்த நிலையை ஏற்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் விஷயத்தில் நிலவும் கடும் அதிருப்தி காரணமாக, அந்த நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக அமைப்பை உருவாக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தினை (ஐஒஏ) மத்திய விளையாட்டுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க: ’உன்னை மிஸ் செய்கிறேன்’ - மகனைக் காணாமல் தவிக்கும் ஷிகர் தவான்: இணையத்தில் வைரலாகும் உருக்கமான பதிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com