‘கோலிக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிட்னஸில் சச்சின் எப்படி விளங்கினார் தெரியுமா?’ - சேவாக்

‘கோலிக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிட்னஸில் சச்சின் எப்படி விளங்கினார் தெரியுமா?’ - சேவாக்
‘கோலிக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிட்னஸில் சச்சின் எப்படி விளங்கினார் தெரியுமா?’ - சேவாக்

இந்திய அணியில் பிட்னசில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் நட்சத்திர வீரரான விராட் கோலியுடன், முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் போட்டி போட்டுக்கொண்டு தனது பிட்னஸை மேம்படுத்தி வைத்திருந்தாக, வீரேந்திர சேவாக் சுவாரஸ்யம் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இன்றளவும் இருப்பவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அவரின் பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமலே உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ஒரே வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்தும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை குவித்துள்ளார். மேலும், ஒருநாள் தொடர்களில் ஆடவர் கிரிக்கெட்டில் டபுள் செஞ்சுரி அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கள் படைத்துள்ளார். தனது 24 வருட நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணி சார்பாக 6 முறை உலகக் கோப்பையில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்நிலையில், சமீபத்தில் யூ-ட்யூப் உரையாடல் ஒன்றின்போது, சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிப்பதற்காக எவ்வாறு பல மணிநேரம் பயிற்சி செய்வார் என்பதை அவருடன் துவக்க ஆட்டக்காரராக பல போட்டிகளில் விளையாடிய முன்னாள் இந்திய அணி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அதில், “ஏன் சச்சின் டெண்டுல்கரால் மட்டும் இத்தனை வருடங்கள் விளையாட முடிந்தது என்று நினைக்கிறீர்கள்?; ஒவ்வொரு ஆண்டும் தனது பேட்டிங் முறையில் புதிதாக என்ன சேர்க்கலாம் அல்லது சிறப்பாக தான் எப்படி கிரிக்கெட்டில் வரலாம் என்று அவர் யோசித்துக்கொண்டே இருந்தார்.

பேட்டிங் செய்யும் விதத்தில் அவரால் புதிதாக எதுவும் சேர்க்க முடியவில்லை என்றால், 100 ரன்களை 200 ஆக மாற்றும் வகையில் தனது உடற்தகுதியை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்து அதற்காக பயிற்சி செய்வார். 2000-களில் நாங்கள் வந்தபோது, எங்களை காட்டிலும் அவர், உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தினார். பின்னர், 2008-ல் விராட் கோலி வந்தப்போதும், அவருக்கு போட்டியாக சச்சின் விளங்கினார். சொல்லப்போனால் விராட் கோலியை விட சச்சின் டெண்டுல்கர் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தினார்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com