சிறுவர்களை வாழ்த்தும் கோலியின் வீடியோ..

சிறுவர்களை வாழ்த்தும் கோலியின் வீடியோ..
சிறுவர்களை வாழ்த்தும் கோலியின் வீடியோ..

FIFA U-17 உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட இருக்கும் சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.  

வரும் அக்டோபர் 6-ம் தேதி இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் FIFA U -17 உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்க உள்ள அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை உற்சாகப்படுத்தும்  வகையில் "வாழ்த்துக்கள் சிறுவர்களே.. எங்களுக்கு பெருமை சேருங்கள்’ என்று கூறி வீராட் கோலி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி  வைராலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com