Novak Djokovicpt desk
டென்னிஸ்
சர்வதேச டென்னிஸ் தரவரிசை... நோவக் ஜோகோவிச் புதிய சாதனை!
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 400 வாரங்கள் முதலிடத்தில் இருந்து நோவக் ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
சமீபத்தில் நிறைவடைந்த ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டென்னிஸ் தர வரிசையில் இந்த வாரமும் 1,300 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 11,245 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து 11ஆவது வாரமாக முதலிடத்தில் நீடிக்கிறார்.
Djokovic championpt desk
இதன்படி, 400 வாரங்கள் அவர் முதலிடத்தை பிடித்து சாதனையை படைத்துள்ளார். இச்சாதனையை படைக்கும் முதல் நபர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து மகளிர் பிரிவில் 377 வாரங்கள் முதலிடம் பிடித்திருந்த ஸ்டெஃபி கிராஃப் உள்ளார். ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் 310 வாரங்கள் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.