Djokovic championpt desk
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் - உலக சாதனையை சமன் செய்து அசத்தல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நியூயார்க்கில் நடைபெற்றது. செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மற்றும் ரஷ்யாவின் டெனில் மெத்வதேவ் இடையே நடைபெற்ற பரபரப்பான இந்தப் போட்டியில் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டெனில் மெத்வதேவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.