T20WC | அதிரடி காட்டும் ரோகித்... புலிப்பாய்சலில் பும்ரா... இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இந்தியா?

ஜஸ்ப்ரித் பும்ரா - முரட்டி ஃபார்மில் இருக்கும் பட்லரையும், எடுத்தவுடனேயே டாப் கியரில் பயணிக்கும் ஃபில் சால்ட்டையும் பவர்பிளேவில் சமாளிக்கவேண்டிய பெரிய பொறுப்பு பும்ராவுக்கு இருக்கிறது.
ரோகித் சர்மா - பும்ரா
ரோகித் சர்மா - பும்ராpt desk

அரையிறுதி 2: இங்கிலாந்து vs இந்தியா

போட்டி நடக்கும் மைதானம்: புராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானா

போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 27, இந்திய நேரப்படி இரவு 8 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை

இங்கிலாந்து

போட்டிகள் - 7, வெற்றிகள் - 4, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 1

சிறந்த பேட்ஸ்மேன்: ஜாஸ் பட்லர் - 7 போட்டிகளில் 191 ரன்கள்

சிறந்த பௌலர்: அதில் ரஷீத் - 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்

England
Englandpt desk

நடப்பு சாம்பியன் லீக் சுற்றில் சற்று ஆடித்தான் போயிருந்தது. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தோல்வி இங்கிலாந்து அணியை வெளியே அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் பெரிய ரன்ரேட்டில் சிறிய அணிகளைப் புரட்டி எடுத்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது அந்த அணி. அங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி கொஞ்சம் பதம் பார்த்தது, இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் கடைசி கட்டத்தில் தடுமாறியதால் இப்போது அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது அந்த அணி.

ரோகித் சர்மா - பும்ரா
இந்தியாவுக்கு இதுதான் பிரச்னையே! டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இடம்பெற்ற 4 அணிகளின் நிறை,குறை என்ன?

இந்தியா

போட்டிகள் - 7, வெற்றிகள் - 6, தோல்வி - 0, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: ரோகித் ஷர்மா - 6 இன்னிங்ஸ்களில் 191 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆர்ஷ்தீப் சிங் - 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்

எந்தவித சவாலும் இல்லாமல் இந்தத் தொடரில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் கடைசி வரை போராட வேண்டியதாக இருந்தது. மற்றபடி இந்தியா வியர்வையே சிந்தாமல் வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கிறது.

virat kohli
virat kohliweb

ஃபார்முக்கு திரும்புவாரா கோலி?

இந்திய அணியைப் பொறுத்தவரை வெற்றிகள் எளிதாக கிடைத்துக்கொண்டிருந்தாலும், எல்லாமே சரியாக அமைந்திடவில்லை. குறிப்பாக விராட் கோலியின் ஃபார்ம் பெரும் கவலை தருவதாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பை அரங்கின் டாப் ரன் ஸ்கோரரான அவர், இப்போது தொடர்ந்து தடுமாறுகிறார். 6 போட்டிகளில் வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் அவர். டி20-யில் அரைசதங்களாக அடித்துக் குவித்தவர் இப்போது 11 என்ற சராசரியில் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே அவரது நாக் அவுட் ஃபார்ம் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாக்கப்படும்.

ரோகித் சர்மா - பும்ரா
அடேங்கப்பா!! ஒரே ஓவரில் 43 ரன்களா? 134வருட கவுன்ட்டி கிரிக்கெட் வரலாற்றில் இங். வீரர் அசத்தல் சாதனை!

இப்படியொரு நிலையில் ஒரு அரையிறுதியில் அவர் பழைய ஃபார்முக்குத் திரும்பவில்லையெனில் இன்னும் பெரிய விமர்சனங்களை சந்திக்க நேரிடும். கேப்டன் ரோகித் ஷர்மா அசத்தலான ஃபார்மில் இருக்கிறார். வெறித்தனமாக அதிரடி காட்டிக்கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது கோலியும் முதல் பந்தில் இருந்தே அடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் தன்னுடைய ஆட்டத்தை ஆடினாலே போதுமானதாக இருக்கும். மிகப் பெரிய வீரர்கள், மிகப் பெரிய தருணங்களில் எழுச்சி பெறுவார்கள். கோலியும் அதேபோல் எழுச்சி காண்பார் என்று எதிர்பார்ப்போம்.

rohit sharma
rohit sharmapt desk

மற்றபடி பெரிய பிரச்னை என்று சொல்வதற்கு இந்திய அணியில் அதிகம் எதுவும் இல்லை. அமெரிக்காவில் தடுமாறிய ஷிவம் தூபே, வெஸ்ட் இண்டீஸில் நல்ல பங்களிப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். என்ன, வேகப்பந்துவீச்சுக்கு எதிராக மட்டும் சற்று தடுமாறுகிறார். இந்திய அணி அவரை சரியாகப் பயன்படுத்தினால் அவருடைய சிறந்த பங்களிப்பையும் பெற முடியும், தொடர்ந்து எதிரணிகளுக்கு சிக்கலாய் இருந்துகொண்டிருக்கும் அதில் ரஷீத்தையும் சரியாகக் கையாள முடியும்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

இங்கிலாந்து: ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், ஹேரி ப்ரூக், சாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், அதில் ரஷீத், ரீஸ் டாப்லி.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆர்ஷ்தீப் சிங்.

bumrah
bumrahICC

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

இங்கிலாந்து: ஜாஸ் பட்லர் - பெரிய ஸ்கோர்கள் அடிக்கத் தடுமாறிக்கொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் சரியான தருணத்தில் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். அமெரிக்காவுக்கு எதிராக அடித்துத் துவைத்து அரைசதம் கடந்தார் அவர். கடந்த உலகக் கோப்பை அரையிறுதி நிச்சயம் எல்லோருக்கும் கண் முன் வந்து போகும்!

இந்தியா: ஜஸ்ப்ரித் பும்ரா - முரட்டி ஃபார்மில் இருக்கும் பட்லரையும், எடுத்தவுடனேயே டாப் கியரில் பயணிக்கும் ஃபில் சால்ட்டையும் பவர்பிளேவில் சமாளிக்கவேண்டிய பெரிய பொறுப்பு பும்ராவுக்கு இருக்கிறது. இரண்டாவது ஓவரில் அவர்களோடு இவர் செய்யும் யுத்தம் நிச்சயம் ஆட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com