INDvAUS | ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா! அமெரிக்காவுக்கு எதிராக என்னென்ன மாற்றங்கள்?

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோர் சற்று தடுமாறுகிறார்கள்.
virat kohli
virat kohliVirat
போட்டி எண் 25: அமெரிக்கா vs இந்தியா
குரூப்: ஏ
மைதானம்: நசௌ கவுன்ட்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூ யார்க்
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 12, இந்திய நேரப்படி இரவு 8 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை:

அமெரிக்கா: போட்டிகள் - 2, வெற்றிகள் - 2, தோல்வி - 0, புள்ளிகள் - 4
சிறந்த பேட்ஸ்மேன்: ஆரோன் ஜோன்ஸ் - 2 போட்டிகளில் 130 ரன்கள்
சிறந்த பௌலர்: நோஷ்துஷ் கெஞ்சிகி - 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகள்
இந்த உலகக் கோப்பை அமெரிக்காவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சென்றுகொண்டிருக்கிறது. முதல் போட்டியில் கனடா 195 ரன்கள் அடித்திருந்தும், அதை அட்டகாசமாக சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி பேரதிர்ச்சி கொடுத்தது அந்த அணி. போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றாலும், அந்த நெருக்கடியை பெரிதாய் காட்டிக்கொள்ளாமல் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது அமெரிக்கா. ஏ பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது அந்த அணி.

இந்தியா: போட்டிகள் - 2, வெற்றிகள் - 2, தோல்வி - 0, புள்ளிகள் - 4
சிறந்த பேட்ஸ்மேன்: ரிஷப் பண்ட் - 2 போட்டிகளில் 78 ரன்கள்
சிறந்த பௌலர்: ஜஸ்ப்ரித் பும்ரா - 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள்
முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானுகு எதிராக பெரும் சவாலை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்து வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் அண்ட் கோ, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. பும்ராவின் அசத்தலான பந்துவீச்சு பெருமளவு கைகொடுக்க, 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளையுமே வென்றிருக்கும் மென் இன் புளூ 1.455 என்ற நல்ல ரன் ரேட் உடன் ஏ பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறது.

சூப்பர் 8 சுற்றை நெருங்கப்போவது யார்?

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சூப்பர் 8 வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிடும். அதனால் இரண்டு அணிகளுமே தங்களின் 100 சதவிகிதத்தைக் கொடுக்க நினைப்பார்கள். அமெரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியால் அதிக நம்பிக்கை பெற்றிருக்கிறது. உள்ளூர் மக்களின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. அந்த அணியின் பேட்டிங் அவர்களுக்குப் பெரும் பலமாக இருக்கிறது. அந்த அணியின் பேட்டிங் அவர்களுக்குப் பெரும் நம்பிக்கை கொடுக்கிறது. டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் இரண்டுமே நன்றாக செயல்படுகிறது. மோனான்க் படேல், ஆரோன் ஜோன்ஸ், ஆண்ட்ரே கஸ் ஆகியோர் சீராக விளையாடி நம்பிக்கை கொடுக்கிறார்கள். அமெரிக்க பேட்ஸ்மேன்களுக்கும் இந்திய பௌலிங்குக்குமான யுத்தம் இந்தப் போட்டியில் மிக முக்கியமானதாக இருக்கும். இந்திய பந்துவீச்சும் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பும்ரா வேறு லெவல் ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 7 ஓவர்கள் பந்துவீசியிருக்கும் அவர், வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறார். நிச்சயம் அமெரிக்க பேட்ஸ்மேன்களுக்கும் அவர் சிம்ம சொப்பனமாய் இருப்பார்.

virat kohli
சொதப்பும் சூர்யகுமார் யாதவ் & ஷிவம் துபே... தவறான முடிவை எடுத்திருக்கிறதா இந்திய அணி?!

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோர் சற்று தடுமாறுகிறார்கள். அதனால் சாம்சன், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்படவேண்டும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. கோலி - ரோஹித் ஓப்பனிங் இணையை இந்திய அணி மாற்ற வாய்ப்பில்லை. அதனால் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். அடுத்த 2 போட்டிகளுமே இந்திய அணி அமெரிக்காவில் தான் விளையாடுகிறது என்பதால் குறைந்தபட்சம் இவ்வொரு போட்டிகளுக்காவது சாம்சனை முயற்சி செய்து பார்க்கலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், மோனான்க் படேல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே கஸ், ஆரோன் ஜோன்ஸ், நித்திஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஷ்துஷ் கெஞ்சிகி, சௌரப் நெட்ராவல்கர், அலி கான்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஆர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:


அமெரிக்கா: ஆரோன் ஜோன்ஸ் - அமெரிக்காவின் டாப் ஸ்கோரர் (130 ரன்கள்) என்பதோடு மட்டுமல்லாமல், அதை 196.96 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார் ஜோன்ஸ். மிடில் ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றக்கூடிய திறன் கொண்டவர் இவர்.

இந்தியா: விராட் கோலி - உலக கிரிக்கெட் அரங்கின் சூப்பர் ஸ்டார் இன்னும் தன் முழு வித்தையையும் இறக்கவில்லை. கடந்த 2 போட்டிகளிலுமே 1, 4 என ஆட்டமிழந்திருக்கிறார். நியூ யார்க்கில் இதுவரை அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்ததே இல்லை. இந்தப் போட்டியில் நிச்சயம் அதை அவர் மாற்ற நினைப்பார்.

கணிப்பு: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com