சொதப்பும் சூர்யகுமார் யாதவ் & ஷிவம் துபே... தவறான முடிவை எடுத்திருக்கிறதா இந்திய அணி?!

சொதப்பும் சூர்யகுமார் யாதவ் & ஷிவம் துபே... அந்த இரு வீரர்களை மட்டுமே குறை சொல்லிட முடியுமா? இவர்கள் விஷயத்தில் அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள் சரிதானா?
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபேpt web

சொதப்பும் சூர்யா மற்றும் துபே

இந்த டி20 உலகக் கோப்பையில் பெரிய எதிர்பார்ப்போடு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே இருவரும் கடந்த 2 போட்டிகளிலுமே சொதப்பியிருக்கிறார்கள். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இந்த இரு வீரர்களின் செயல்பாட்டை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த இரு வீரர்களை மட்டுமே குறை சொல்லிட முடியுமா? இவர்கள் விஷயத்தில் அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள் சரிதானா?

2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி,

  • முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராகவும் (8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்),

  • இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் (6 ரன்கள் வித்தியாசத்தில்)

வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்டிங். அயர்லாந்துக்கு எதிராக சேஸிங்கின்போது 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் சூர்யா. 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார் துபே. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார் சூர்யா. துபேவோ 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே
சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்குமா பாகிஸ்தான்.. முதல் வெற்றிக்காக கனடாவுடன் மோதல்..!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும், சூர்யா மற்றும் துபேவின் பேட்டிங்கை ரசிகர்கள் வெகுவாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ரிங்கு சிங் போன்ற ஒரு வீரர் அணியில் இடம்பெறுவார் என்று நினைத்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த ஷிவம் துபே ஸ்குவாடில் இடம்பெற்றார்.

அதேபோல் இந்த் ஸ்குவாடில் சாம்சன், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்குப் பதிலாக இவர் களமிறக்கப்பட்டது விமர்சனம் செய்யப்படுகிறது. அதேபோல் சமீபமாக தொடர்ந்து காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவர்களின் செயல்பாடு, அதன் காரணம் போன்றவற்றை சற்று அலசுவோம்.

ஷிவம் துபே - அமெரிக்காவுக்கு இல்லை, கரீபிய தீவுகளுக்கான வீரர்

ஷிவம் துபே இந்திய அணி உலகக் கோப்பைக்கு தேர்வு செய்தபோது அவர் நல்ல ஃபார்மில் இருந்தார். மிடில் ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பொளந்து கட்டினார். ஆனால், அவரை வெறும் ஃபார்மின் காரணமாக மட்டும் தேர்வுக்குழு டிக் செய்யவில்லை. துபே ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக ஆடக் கூடியவர். ஸ்பின்னர்களை ஒட்டுமொத்தமாக ஆட்டத்திலிருந்து எடுக்கக் கூடியவர்.

கரீபிய தீவுகளில் ஆடுகளங்கள் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும். ஒவ்வொரு அணியும் கூடுதல் ஸ்பின்னரோடு களமிறங்கும். அப்படியிருக்கையில் அவர்களை எதிர்கொள்ள துபே போன்ற ஒரு பிளேயர் துருப்புச் சீட்டாக இருப்பார். அதனால்தான் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே
‘இந்தியா கோப்பை வெல்ல ஹர்திக் பாண்டியா அவசியம்..’! ஐபிஎல் விமர்சனங்களை கடந்து பாராட்டும் ரசிகர்கள்!

காரணம் இப்படியிருக்க, இந்தியா இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் கரீபியத் தீவுகளில் இல்லாமல் அமெரிக்காவில் நடந்திருக்கின்றன. அதுவும் நியூ யார்க்கில். நசௌ கவுன்டி ஸ்டேடியத்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்துமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்றன. அதுதான் துபேவின் இந்தத் தடுமாற்றத்துக்குக் காரணம். ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் சரியான ஆப்ஷன் இல்லை நினைக்கலாம். ஆனால், அதற்கடுத்த போட்டியில் இருந்து துபேவின் தேவை பன்மடங்கு உயரும். அப்போது அவரது செயல்பாட்டை அளவிடுவது சரியானதாக இருக்கும்.

சூர்யகுமார் யாதவ் - சரியான இடத்தில் களமிறக்கப்படுகிறாரா?

சூர்யாவைப் பொறுத்தவரை அவர் நம்பர் 3 பொசிஷனில் ஆடுவதற்கு சரியான வீரர். அதுதான் அவரது ஃபேவரிட் பொசிஷன். ஆனால் திடீரென இந்த உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட்டை மூன்றாவது வீரராகக் களமிறக்கியிருக்கிறது இந்தியா. அதனால், சூர்யா இன்னும் கீழே, இன்னும் நெருக்கடியான சூழலில் களமிறங்குகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலோ அவர் ஐந்தாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். அப்படி வரும்போது வழக்கத்துக்கு மாறான அதிக நெருக்கடியை அவர் உணரக்கூடும். நம்பர் 3 பொசிஷனில் வரும்போது, அடுத்த நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்ற மனநிலையில் அவரால் ஆட முடியும். அப்போது அவரது வழக்கமான பாணியில் அவரால் சில ரிஸ்க் எடுக்க முடியும். ஆனால், கீழே ஆடும்போது அப்படியில்லை. தனக்குப் பிறகு ஒன்றோ அல்லது இரண்டு பேட்ஸ்மேன்களோதான் இருப்பார்கள். ஒவ்வொரு முடிவையம் அலசி ஆராய்ந்தே எடுக்க முடியும். அது அவரது இயற்கையான ஆட்டத்தை பாதிக்கும். அப்படி ஒரு சூழ்நிலைக்குத்தான் சூர்யாவைத் தள்ளியிருக்கிறது இந்திய அணி.

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே
“AllOut பண்ணா தான் வெல்ல முடியும்..” - பொதுவான மரபை உடைத்த ரோகித்-பும்ரா! இந்தியா வென்றது எப்படி?

இந்த 2 பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரையிலுமே அவர்கள் சரியான சூழ்நிலைகளில், சரியான இடங்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே, நிர்வாகத்தின் முடிவுகள்தான் இதில் பிரதிபலிக்கிறதே தவிர, வீரர்களின் திறமை இல்லை.

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே
IND vs PAK | டி20 உலகக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com