“பும்ராவை 8வது அதிசயமாக அறிவிக்கலாம்...” - விராட் கோலி புகழாரம்!

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை 8ஆவது அதிசயமாக அறிவிக்க கோரும் மனுவில் கையெழுத்திட தயாராக இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி - பும்ரா
விராட் கோலி - பும்ராட்விட்டர்

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றி பேரணி, மும்பையில் நடைபெற்றது. தொடர்ந்து வான்கடே மைதானத்தில், வீரர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பும்ரா
பும்ரா

அப்போது விராட் கோலியிடம், ‘பும்ராவை 8ஆவது அதியசமாகவும், தேசிய பொக்கிஷமாகவும் அறிவிக்க கோரும் மனுவில் கையெழுத்துவிடுவீர்களா?’ என கேட்கப்பட்டது.

விராட் கோலி - பும்ரா
டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் டாப் 5 பிளேயர்கள் யார்?

ஒரு விநாடி கூட தயங்காத விராட் கோலி, “பும்ராவுக்காக நான் கையெழுத்திடுவேன். பும்ரா நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் பந்துவீச்சாளர். மேலும், இறுதிப்போட்டியில் ஒரு கட்டத்தில் உலகக் கோப்பை மீண்டும் கை நழுவிப் போவது போல் உணர்ந்தேன். ஆனால் இறுதி 5 ஓவர்களில் நடந்தவை மிகவும் சிறப்பானவை. கடைசி 5 ஓவர்களில் 2 ஓவர்களை வீசி பும்ரா செய்தது தனித்துவமானது” என புகழாரம் சூட்டினார்.

விராட் கோலி - பும்ரா
டி20 உலகக்கோப்பை | வெற்றி பேரணியால் திக்குமுக்காடிய மும்பை... ரூ.125 கோடி பரிசுத்தொகை தந்த பிசிசிஐ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com