‘தோனியைவிட சிறந்த கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது’ - சிஎஸ்கே முன்னாள் வீரர் பாராட்டு!

மகேந்திர சிங் தோனியைவிட சிறந்த கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
MS Dhoni
MS DhoniPTI

கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசியின் 3 கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன எம்.எஸ். தோனி. அவரது தலைமையிலான இந்திய அணி, ஐசிசியின் டி20 (2007) மற்றும் ஒருநாள் (2011) உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி (2013) என 3 கோப்பைகளை வென்றது. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், அதன்பின்னர், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்தார்.

MS Dhoni
‘ரஜினிகாந்த் போல் செயல்படுவது கடினம்.. Pose-ஆவது காப்பியடிப்போமேனுதான்..’ - தோனி கலகல பதில்!

இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு தலைமை தாங்கி விளையாடி வருகிறார் தோனி. சென்னை அணி அவரது தலைமையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5-வது முறை கோப்பை வெல்லும் முனைப்பில் இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

இந்தநிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது, “மகேந்திர சிங் தோனி, ஒருவர் மட்டுமே. அவரை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் வேறு யாரும் இருக்க முடியாது. அவரை விட யாராவது ஒருவர் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம், விக்கெட் கீப்பிங்கில் அவரை விட வேறு யாராவது ஒருவர் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கலாம், ஆனால் தோனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் வேறு யாருக்கும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங், தோனி, ரெய்னா
ஹர்பஜன் சிங், தோனி, ரெய்னா

மேலும் “தோனியும் தனது ரசிகர்களை மனதார ஏற்றுக்கொண்டார். அதேபோல் தனது சக வீரர்களையும் அவர் மதிக்கிறார். தோனிக்கு கிடைக்கும் இவ்வளவு அன்பு மற்றும் உணர்ச்சி குவியல்கள் வேறு யாருக்கு கிடைத்தாலும் வேறுமாதிரி ஆகிவிடுவார்கள். ஆனால், தோனி தனது மனதில் 15 ஆண்டுகளாக இதனை சுமந்துக்கொண்டு இருந்தாலும், அவர் மாறவே இல்லை” என்று ஹர்பஜன் சிங் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் சென்னை அணி பேட்டர் ஷிவம் துபேவை பாராட்டியுள்ள ஹர்பஜன் சிங், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரரான முகமது சிராஜைவிட வேறுயாரும் சர்வதேச கிரிக்கெட்டில் நன்றாக பவுலிங் செய்வதாக தனக்கு தோன்றவில்லை அவர் தெரிவித்துள்ளார்.

MS Dhoni
‘மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது... ஆனால், தோனி மட்டுமே இதனை செய்கிறார்’ - ஆகாஷ் சோப்ரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com