‘ரஜினிகாந்த் போல் செயல்படுவது கடினம்.. Pose-ஆவது காப்பியடிப்போமேனுதான்..’ - தோனி கலகல பதில்!

நடிகர் ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட போஸ் போன்று இமிடேட் செய்து எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்து தோனி விளக்கமளித்துள்ளார்.
Rajinikanth - Dhoni
Rajinikanth - Dhoniட்விட்டர்

இந்தியாவில் தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட், சினிமா பிரபலங்களை ரசிகர்கள் தூக்கிவைத்து கொண்டாடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்ற பெயருக்கேற்ற வகையில், ராஞ்சியில் பிறந்து பிரபலமாகி இருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு என்று தமிழ்நாட்டில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதேபோல், தோனிக்கும் சென்னையின் மீது தனிப்பிரியம் உண்டு.

Rajinikanth - Dhoni
‘மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது... ஆனால், தோனி மட்டுமே இதனை செய்கிறார்’ - ஆகாஷ் சோப்ரா

இதேபோல், நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசும்போதெல்லாம் ‘என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே’ என்றுதான் பேச ஆரம்பிப்பார். தமிழ்நாட்டையும் தாண்டி பெரும்பாலான ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைல் பிடிக்கும் என்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கபாலி’ படத்தில் கோட் சூட் அணிந்து சோபாவில் அமர்ந்து ஸ்டைலாக போஸ் ஒன்று கொடுத்திருப்பார். அதேப்போன்று சென்னை அணியின் கேப்டன் தோனி ஸ்டைலாக அமர்ந்துக்கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போஸ் கொடுத்திருந்தார். இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருந்தார்.

தற்போது அதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதில் ஒப்பீடுவதற்கு எதுவும் இல்லை. ஒரு சிறந்த மனிதரின் சிறந்தப் போஸை காப்பி செய்ய முயற்சி மேற்கொண்டோம். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. ஏனெனில், அவரைப் போன்று யோசிப்பதும், செயல்படுவதும் மிகவும் சிரமமானது. இருந்தாலும் அவரது போஸையாவது காப்பி அடிப்போம் என்று எடுத்தது அது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து உங்களைப் போல யோசிப்பதும் கடினமானதுதான் என்று கேள்வி எழுப்பிய நபர் தோனியிடம் தெரிவித்ததும், ‘களத்தில் வேண்டுமானால் இருக்கலாம்’ என்று சிரித்துக் கொண்டே அவர் பதில் கூறினார். இந்த வீடியோவை சென்னை அணி நிர்வாகம் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் கிங் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.

Rajinikanth - Dhoni
‘என் பிரெண்ட போல யாரு மச்சான்’... மைதானத்தில் தோனியுடன் மனம்விட்டு சிரித்து மகிழ்ந்த விராட் கோலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com