6 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அதிசயம் நிகழ்த்திய பேட்டர்! (வீடியோ)

டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 46 ரன்கள் எடுத்து அபார சாதனை படைக்கப்பட்டுள்ளது.
cricket
cricketfancode

கிரிக்கெட்டில் டி20 வகையிலான போட்டி பிரமிப்பாகப் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், சில தருணங்களில் 50 ஓவர்களில் எடுக்கப்படும் ஸ்கோர், வெறும் 120 பந்துகளிலேயே எடுக்கப்படுவதுதான். டி20யின் வருகைக்குப் பின்னர் பல இளம் வீரர்கள் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். அற்புதமான ஷாட்களை அடித்து ரன் மழை பொழிகின்றனர். அதிலும் 6 பந்துகளில்கூட 36க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்க முடியும் என்பதைக் காட்டும் போட்டியாக டி20 மாறி வருகிறது. அப்படி ஓர் அதிசயமான போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.

ஆம், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு ஓவரில் வீசப்படும் 6 பந்துகளில் அதிகபட்சமாக பேட்டர் ஒருவரால் 36 ரன்கள் மட்டுமே, அதாவது 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை விளாசினால்கூட அந்த ரன்கள்தான் வரும். ஆனால், இந்த விதியையே மாற்றி எழுதியிருக்கிறது, குவைத்தில் நடைபெற்ற ஓர் ஆட்டம்.

குவைத்தில் நடைபெற்று வரும் KCC Friendly Mobile T20 Champions தொடரில்தான் இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. இந்த தொடரில் NCM இன்வெஸ்ட்மென்ட் மற்றும் Tally CC ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் Tally CC அணி பந்து வீச்சாளர் ஹர்மன் சிங் வீசிய ஒரு ஓவரில், NCM இன்வெஸ்ட்மென்ட் பேட்டர் வாசுதேவ், 46 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியின் 15வது ஓவரை வீசிய ஹர்மன், முதல் பந்தில் சிக்ஸர் வழங்கினார். இந்த பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டதால் அது, நோ பால் என நடுவரால் அறிவிக்கப்பட்டது. அதற்கு ரீபால் வீசிய ஹர்மனின் அடுத்த பந்தை வாசுவால் தொடமுடியவில்லை. மேலும், அந்தப் பந்து விக்கெட் கீப்பரின் கையிலும் படாமல் நேராக பவுண்டரி எல்லைக்கு ஓடியது. இதன்மூலம் 4 ரன்கள் வந்தது. இதையடுத்து 2வது பந்தை வீசிய ஹர்மன், அதிலும் ஒரு சிக்ஸர் கொடுத்தார். தொடர்ந்து 3வது பந்தையும் நோ பாலாக வீசிய ஹர்மன், அதிலும் சிக்ஸர் அடித்து அசத்தினார், வாசு. பின்னர் 3வது பந்துக்கு ரீபால் வீசிய ஹர்மன், அதிலும் ஒரு சிக்ஸர் வழங்கினார். பின்னர் 4 மற்றும் 5வது பந்துகளைச் சரியாக வீசியபோதும் அதிலும் 2 சிக்ஸர்களை வழங்கினார். இறுதியில் கடைசிப் பந்தை வீசி, அதிலும் ஒரு பவுண்டரி வழங்கினார். இதன்மூலம், ஒரு ஓவரில் 46 ரன்கள் [6+1(nb), 4, 6, 6+1(nb), 6, 6, 6, 4 = 46] வழங்கிய பந்துவீச்சாளர் பட்டியலில் இடம்பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியில் NCM இன்வெஸ்ட்மென்ட் அணி, 20 ஓவர்களில் 282 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய Tally CC அணி 66 ரன்களில் சுருண்டதால், 216 ரன்கள் வித்தியாசத்தில் NCM இன்வெஸ்ட்மென்ட் அணி வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com