srh teamweb
T20
சன் ரைசர்ஸ் அணி குற்றச்சாட்டு.. தெலங்கானா முதல்வர் போட்ட உத்தரவு!
இலவச டிக்கெட் வழங்க வேண்டும் என கேட்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மிரட்டுவதாக கூறி ஹைதராபாத்தை விட்டு வெளியேற தயார் என சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீதான சன் ரைசர்ஸ் அணியின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கூடுதலாக 20 இலவச டிக்கெட்டுகளை கேட்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மிரட்டுவதாக, சன் ரைசர்ஸ் அணியின் மேலாளர் புகார் தெரிவித்திருந்தார். ஹைதாராபாத்திலிருந்து வெளியேற தாங்கள் தயார் எனவும் கூறியிருந்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை, ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் ஜகன் மோகன் ராவ் மறுத்திருந்தார்.