T20 WC| சூப்பர் 8 சுற்றில் நுழையப்போகும் அணிகள்.. Final வரை செல்லும் வெஸ்ட் இண்டீஸ்? ஏன் தெரியுமா?

ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
மைதானம்
மைதானம்எக்ஸ் தளம்

அனைவரும் எதிர்பார்க்கும் ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவுமுதல் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற இருக்கிறது. இதில் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த அணிகள், நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அணிகள் உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் பி பிரிவிலும், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூகினியா, உகாண்டா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகள் சி பிரிவிலும், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் டி பிரிவிலும் விளையாட இருக்கின்றன.

இதையும் படிக்க: தோனி, கோலி, ரோகித் யாராலும் செய்ய முடியாத சாதனை! தனி ஒருவனாக சாதித்த தினேஷ் கார்த்திக்!

மைதானம்
“AUS-PAK அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்...” - டி20 WC-ல் இந்தியாவை புறக்கணித்த ஆஸி. பவுலர்!

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள், இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். அதன் குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அந்த வகையில், தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அல்லது வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அல்லது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பல போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருப்பதால், அந்த அணி இறுதிப்போட்டி வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், போட்டிகளின் வெற்றி குறித்து இந்தப் பட்டியல் மாறும் எனக் கூறப்படுகிறது. பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியையே வீழ்த்தி இருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இதையும் படிக்க: குழந்தையுடன் இயேசு கிறிஸ்து| ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷாவின் வைரலாகும் படம்.. ரசிகர்கள் கேள்வி?

மைதானம்
”இதனால்தான் டி20 உலகக்கோப்பையில் என்னால் தேர்வாக முடியவில்லை..” - மௌனம் கலைத்த ரிங்கு சிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com