சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலியா... நமீபியாவுடன் மோதல்

ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும்.
aus vs nam
aus vs namx page

போட்டி எண் 24: ஆஸ்திரேலியா vs நமீபியா

குரூப்: பி

மைதானம்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், அன்டிகுவா

போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 11, இந்திய நேரப்படி காலை 6 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை

ஆஸ்திரேலியா: போட்டிகள் - 2, வெற்றிகள் - 2, தோல்வி - 0, புள்ளிகள் - 4

சிறந்த பேட்ஸ்மேன்: மார்கஸ் ஸ்டாய்னிஸ் - 2 போட்டிகளில் 97 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகள்

ஒருசில அணிகள் இந்தத் தொடரில் அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் ஓமனுக்கு எதிராக 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக்க கோப்பையைத் தொடங்கியது அந்த அணி. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய முதலில் 201 ரன்கள் விளாசியது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி இங்கிலாந்தை 165 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: சீனாவுக்குப் பதிலடி|திபெத்தில் 30 இடங்களுக்குப் பெயரை மாற்றும் இந்தியா!

aus vs nam
“AUS-PAK அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்...” - டி20 WC-ல் இந்தியாவை புறக்கணித்த ஆஸி. பவுலர்!

நமீபியா: போட்டிகள் - 2, வெற்றி - 1, தோல்வி - 1, புள்ளிகள் - 2

சிறந்த பேட்ஸ்மேன்: ஜெரார்ட் எராஸ்மஸ் - 2 போட்டிகளில் 65 ரன்கள்

சிறந்த பௌலர்: ரூபென் டிரம்பிள்மேன் - 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள்

நமீபியாவின் இந்த உலகக் கோப்பை ஏற்றமும் இறக்கமுமாய் பரபரப்பாகவே சென்றுகொண்டிருக்கிறது. ஓமனுக்கு எதிராக எளிதாக வெல்லவேண்டிய போட்டியை டை செய்து, சூப்பர் ஓவர் வரை சென்று வென்றனர். ஸ்காட்லாந்துக்கு எதிராக 155 ரன்கள் எடுத்திருந்தாலும், பந்துவீச்சு மிகவும் சுமாராக இருந்ததால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது நமீபியா. இப்போது பி பிரிவில் 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது அந்த அணி.

சூப்பர் 8 சுற்றை உறுதி செய்யுமா ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு ஏரியாவிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பேட்டிங், பௌலிங் அனைத்துமே நன்றாக சென்றுகொண்டிருக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களுமே நன்றாக செயல்பட்டிருக்கிறார்.

டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவருமே 25+ ரன்கள் எடுத்தனர். ஓப்பனர்கள் வார்னர், ஹெட் இருவருமே மிரட்டலான தொடக்கம் கொடுத்தனர். ஃபார்மில் இல்லை என்று கருதப்பட்ட கேப்டன் மிட்செல் மார்ஷ், ஆல் ரவுண்டர் கிளென் மேக்வெல் ஆகியோரும் நல்ல ஸ்கொர் எடுத்தனர். மார்கஸ் ஸ்டாய்னிஸோ வேறு லெவல் ஃபார்மில் இருக்கிறார். ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டுமே பக்காவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பந்துவீச்சிலும் அனைவரும் நன்றாகவே செயல்படுகின்றனர். முதல் போட்டியில் ஆடிய எல்லிஸ் நன்றாக ஆடினார். அடுத்த போட்டியில் அவருக்குப் பதில் வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸும் அட்டகாசமாக செயல்பட்டார். இப்படி மொத்த அணியும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. போக, இந்தப் போட்டியை ஆஸ்திரேலியா வென்றால் 6 புள்ளிகளுடன் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும்.

இதையும் படிக்க: ”பும்ரா பெயரைக் கேட்டாலே பயம்” - பாகிஸ்தான் பேட்டர்களைச் சாடிய வாக்கார் யூனிஸ்!

aus vs nam
What a match! டி20 உலகக் கோப்பையில் அரங்கேறிய த்ரில் போட்டி.. சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்திய நமீபியா!

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஸ் ஹேசில்வுட்.

நமீபியா: ஜே.பி.கோட்ஸே, நிகோலஸ் டேவின், ஜேன் ஃப்ரைலிங்க், ஜெரார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), மலன் க்ரூகர், ஜேன் கிரீன் (விக்கெட் கீப்பர்), டேவிட் வீஸா, ரூபன் ட்ரம்பிள்மேன், ஜே.ஜே.ஸ்மிட், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், தாங்கேனி லுங்காமெனி.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

ஆஸ்திரேலியா - கிளென் மேக்ஸ்வெல்: ஐபிஎல், உலகக் கோப்பை என தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்களாக எடுத்துவந்த கிளென் மேக்ஸ்வெல் இங்கிலாந்துக்கு எதிராக 28 ரன்கள் எடுத்து சிறு நம்பிக்கை கொடுத்தார். இருந்தாலும் 201 ரன்கள் எடுக்கப்பட்ட அந்த இன்னிங்ஸில் அவர் 112 என்ற ஸ்டிரைக் ரேட்டில்தான் ஆடியிருந்தார். இருந்தாலும் ரன்கள் எடுத்திருப்பது நிச்சயம் நம்பிக்கை தான். அவர் இந்தப் போட்டியில் இன்னும் வேகமாக ஆடினால், பழைய மேக்ஸியை மீட்டெடுக்க முடியும்.

நமீபியா - டேவிட் வீஸா: ஒரு சாம்பியன் அணிக்கு எதிரான மிகப் பெரிய போட்டியில் அனுபவம் அதீத முக்கியத்துவம் பெரும். பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே நமீபியாவுக்கு வீஸாவின் அனுபவம் கைகொடுக்கும்.

கணிப்பு: ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும்.

இதையும் படிக்க: உத்தரப்பிரதேசம்| கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்.. ஜேசிபியைக் கொண்டு இடித்துத் தள்ளிய ஓட்டுநர்!

aus vs nam
T20 WC 2024 | டி20 வரலாற்றில் முதன்முறை.. புதிய சாதனை படைத்த நமீபியா பவுலர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com