T20 WC: டிரென்ட் போல்டை வெற்றியோடு வழி அனுப்பி வைக்குமா நியூசிலாந்து...?

T20 WC: நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் டிரென்ட் போல்ட் இதுதான் அவருடைய கடைசி உலகக் கோப்பை என்பதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்... அவரை வெற்றியோடு வழி அனுப்பி வைக்குமா அந்த அணி?
டிரென்ட் போல்ட்
டிரென்ட் போல்ட்pt web

போட்டி எண் 39: நியூசிலாந்து vs பாபுவா நியூ கினீ

குரூப்: சி

மைதானம்: பிரயன் லாரா ஸ்டேடியம், டரூபா, டிரினிடாட்

போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 17, இந்திய நேரப்படி இரவு 8 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை

நியூசிலாந்து: போட்டிகள் - 3, வெற்றி - 1, தோல்விகள் - 2, புள்ளிகள் - 2

சிறந்த பேட்ஸ்மேன்: கிளென் ஃபிலிப்ஸ் - 2 இன்னிங்ஸ்களில் 58 ரன்கள்

சிறந்த பௌலர்: டிரென்ட் போல்ட் - 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகள்

மேலே சிறந்த பேட்ஸ்மேனுக்கான வரிசையில் வெறும் 58 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் கிளென் ஃபிலிப்ஸின் பெயர் இருப்பதே சொல்லிவிடும் நியூசிலாந்து அணிக்கு இது எப்படிப்பட்ட உலகக் கோப்பையாக அமைந்திருக்கிறது என்று. ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோற்று சூப்பர் 8 வாய்ப்பை இழந்துவிட்டது அந்த அணி. உகாண்டாவை மட்டும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது அந்த அணி.

டிரென்ட் போல்ட்
‘பாபர் மசூதி வார்த்தையே இல்ல.. நீதிமன்ற கருத்தும் நீக்கம்’- பாடப்புத்தக திருத்தத்தால் எழுந்த சர்ச்சை

பாபுவா நியூ கினீ

போட்டிகள் - 3, வெற்றி - 0, தோல்விகள் - 3, புள்ளி - 0

சிறந்த பேட்ஸ்மேன்: கிப்லின் டொரிகா - 3 போட்டிகளில் 66 ரன்கள்

சிறந்த பௌலர்: அலேய் நாவ் - 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகள்

இந்தத் தொடரில் வெற்றிக்கு கொஞ்சம் அருகில் கூட வராத ஒரே அணி பாபுவா நியூ கினீ தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 5 விக்கெட்டுகளில், உகாண்டாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 7 விக்கெட்டுகளில் இந்த அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் ஓரளவு சிறப்பாகப் பந்துவீசியிருந்தால் வெற்றியை வசப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அவர்களின் பந்துவீச்சு அவர்களுக்குக் கைகொடுக்கவில்லை. அனைத்து போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்தது அந்த அணிக்கு சரிபட்டு வரவில்லை.

டிரென்ட் போல்ட்
நாயகன்: இளவரசர் To இளைஞர்களின் நம்பிக்கை... ராகுல் கடந்து வந்த பாதை!

வெற்றியோடு வெளியேறுமா நியூசிலாந்து:

இந்த உலகக் கோப்பை நியூசிலாந்து அணிக்கு பேரடியாக அமைந்திருக்கிறது. அந்த அணியின் எந்த பேட்ஸ்மேனும் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடவில்ல. கேப்டன் வில்லியம்சன் உள்பட அனைவருமே தடுமாறியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தோல்வி அவர்களின் சூப்பர் 8 வாய்ப்பையும் நொறுக்கிவிட்டது. பல முன்னணி வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாகவும் அமையப்போகிறது. சீனியர் வீரர் டிரென்ட் போல்ட் இதுதான் அவருடைய கடைசி உலகக் கோப்பை என்பதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதனால் நிச்சயம் அந்த அணி வெற்றியோடு அவர்களையெல்லாம் வழியனுப்பி வைக்க நினைக்கும். இந்தப் போட்டி நடக்கும் பிரயன் லாரா ஸ்டேடியம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு சாதகமாக இருக்கிறது. அதனால் நிச்சயம் போல்ட் அண்ட் கோவுக்கு இது நல்ல வேட்டையாக அமையும்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவன் கான்வே (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சௌத்தி, லாக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.

பாபுவா நியூ கினீ: அசாத் வாலா (கேப்டன்), டோனி உரா, செசே பாவ், லெகா சியாகா, ஹிரி ஹிரி, கிப்லின் டொரிகா (விக்கெட் கீப்பர்), சேட் சாபர், நார்மன் வனுவா, அலேய் நாவ், ஜான் கரிகோ, செமோ கேமியா.

டிரென்ட் போல்ட்
வேலைக்கு வெளிநாடு செல்லும் இந்தியர்கள்.. உணவு இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் அவலம்...

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

நியூசிலாந்து - டிரென்ட் போல்ட்: நியூசிலாந்து அணிக்காக தன் கடைசி உலகக் கோப்பை போட்டியில் ஆடவிருக்கிறார் டிரென்ட் போல்ட். ஏற்கெனவே 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். கடைசி முறையாக உலக அரங்கில் போல்ட் மின்னல் வெட்டுவதைப் பார்க்கலாம்.

அலேய் நாவ்: பாபுவா நியூ கினீ அணியின் சிறந்த பௌலராகத் திகழும் இவர் பவர்பிளேவில் நன்றாக செயல்படுகிறார். தடுமாறிக்கொண்டிருக்கும் நியூசிலாந்து பேட்டிங்குக்கு ஆரம்பத்திலேயே இவர் சவால் கொடுத்தால், இந்தப் போட்டியில் பாபுவா நியூ கினீயின் கை ஓங்கலாம்.

கணிப்பு: நியூசிலாந்து அணி வெற்றியோடு உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும்.

டிரென்ட் போல்ட்
ரஷ்யா - உக்ரைன் போர்... தீர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த அமைதி உச்சி மாநாடு.. கையெழுத்திடாத இந்தியா..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com