தோனிக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய செக்.. ருதுராஜ் செய்த 4 மோசமான தவறுகள்! SRH அசத்தல் வெற்றி!

நடப்பு சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹத்ராபாத் அணி.
srh vs csk
srh vs cskx

சிஎஸ்கே அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுக்கொடுத்து வெற்றிக்கேப்டனாக வலம்வரும் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கேப்டன் பதிவியிலிருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

இதேபோல கடந்த 2022-ம் ஆண்டு தோனியிடமிருந்த கேப்டன்சி பொறுப்பானது ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த பொறுப்பை ஏற்ற ஜடேஜாவால் அதை வெற்றிகரமாக கொண்டுசெல்ல முடியவில்லை. 14 போட்டிகளின் முடிவில் 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடம்பிடித்து மோசமாக வெளியேறியது. இறுதியாக ஜடேஜாவிடமிருந்த கேப்டன்சி பொறுப்பு மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கப்பட்டாலும், அவரால் கூட அப்போது சிஎஸ்கே அணியை மீட்க முடியவில்லை.

srh vs csk
srh vs csk

இந்நிலையில் தற்போது மீண்டும் கேப்டன்சி பொறுப்பானது தோனியின் கைகளில் இருந்து ருதுராஜ் கைகளுக்கு சென்றுள்ளது. ”நான் என் சொந்த கால்களில் நிற்க விரும்புகிறேன்” என்று புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ருதுராஜ் கெய்க்வாட் கூறினாலும், இன்றைய சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜிடமிருந்து Poor கேப்டன்சியே வெளிப்பட்டது.

srh vs csk
'உயிரை கொடுத்து விளையாடிய Shashank..' ஆனால் பஞ்சாப் அணி செய்த மோசமான செயல்? விளாசிய முன்.வீரர்!

அதிரடியில் மிரட்டிய ஷிவம் துபே!

ஹைத்ராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி. டாஸ் வென்ற SRH கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடந்த போட்டியில் இதே ஆடுகளத்தில் தான் 277 ரன்கள் அடிக்கப்பட்டதால் எப்படியும் மிகப்பெரிய டோட்டல் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆடுகளமானது சுத்தமாக ஸ்லோ பிட்ச்சாக மாற்றப்பட்டு, பந்தானது நன்றாக நின்று வந்தது. அதனால் பந்தை டைமிங் செய்வதில் சிஎஸ்கே வீரர்கள் கோட்டைவிட்டனர். ரச்சின் ரவிந்திரா 12 ரன்னில் வெளியேற, 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய கேப்டன் ருதுராஜ் 26 ரன்களில் வெளியேறினார்.

ஜடேஜா
ஜடேஜா

7 ஓவர்களுக்கு 54 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே அணி எடுக்க, 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷிவம் துபே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். “இவர் மட்டும் தனி பிட்ச்ல விளையாடுறாரு போல” என நினைக்கவைத்த துபே 2 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்ட சென்னை அணிக்கு ரன்கள் நன்றாகவே வரத்தொடங்கியது. 13 ஓவர்களுக்கு 119 ரன்கள் என எட்டிய சிஎஸ்கே அணி எப்படியும் 190 ரன்களை எட்டிவிடும் என நினைத்தபோது தான், பந்துவீச வந்த பாட் கம்மின்ஸ் நல்ல ஃபார்மில் ஜொலித்த ஷிவம் துபேவை 45 ரன்களில் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

துபே
துபே

அதற்குபிறகு சன்ரைசர்ஸ் அணி வீசிய சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாத சிஎஸ்கே பேட்டர்கள் ரன்களை எடுத்துவர தடுமாறினர். கடைசி 36 பந்துகளுக்கு 45 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்த சிஎஸ்கே அணியால், 20 ஓவர் முடிவில் வெறும் 165 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

srh vs csk
அன்று ”இந்த வீரரே வேண்டாம்” என மறுத்த பஞ்சாப் அணி.. இன்று தனியாளாக சம்பவம் செய்த ஷசாங்! யார் இவர்?

பதிலடி கொடுத்த அபிஷேக் சர்மா!

சிறந்த ஃபார்மில் இருந்துவரும் சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு 166 என்ற இலக்கானது எளிதில் எட்டக்கூடியதாகவே இருந்தது. போதாக்குறையாக முதல் ஓவரிலேயே கைக்கு வந்த டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சை மொயின் அலி கோட்டைவிட, இம்பேக்ட் வீரராக பந்துவீச வந்த முகேஷ் சவுத்ரியின் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என விரட்டி 27 ரன்களை எடுத்துவந்த அபிஷேக் சர்மா சிஎஸ்கே அணிக்கு அடிக்குமேல் அடிகொடுத்தார்.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா

வெறும் 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய அபிஷேக் சர்மா, முதல் மூன்று ஓவரிலேயே சிஎஸ்கே அணியின் தோல்வியை உறுதிசெய்தார். அபிஷேக் சர்மா ஒருபுறமும், டிராவிஸ் ஹெட் மறுபுறமும் என சிஎஸ்கே பவுலர்களை மாறிமாறி டார்கெட் செய்து சம்பவம் செய்தனர். அபிஷேக் 37 ரன்னிலும், ஹெட் 31 ரன்னிலும் வெளியேற, 3வது வீரராக களமிறங்கிய எய்டன் மார்கரம் நிதானமாக விளையாடி சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிய மார்க்ரம் 36 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க, 19வது ஒவரிலேயே இலக்கை எட்டிய சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

srh vs csk
இனி MI-க்கு வெற்றிப்பாதை தான்.. அணிக்கு திரும்பும் சூர்யகுமார் யாதவ்! வெளியான முக்கிய தகவல்!

ருதுராஜ் செய்த 4 தவறுகள்..

தோல்வியடைந்த சென்னை அணியை பொறுத்தவரையில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், அனுபவமின்மையால் நிறைய தவறுகளை செய்து போட்டியை தங்கள் பக்கம் கொண்டுவர தவறவிட்டார். ஸ்லோ பிட்ச் ஆடுகளம் என்பதால் ஷிவம் துபே போன்ற ஹார்ட் ஹிட்டிங் பேட்ஸ்மேன்களால் ரன்களை எடுத்துவர முடிந்தது. அந்தவகையில் ரவிந்திர ஜடேஜாவுக்கு முன்னதாக மொயின் அலியை களமிறக்கியிருக்க வேண்டும், அவரை தொடர்ந்து நல்ல டச்சில் இருக்கும் ஹார்ட் ஹிட்டிங் பேட்டரான தோனியை பேட்டிங்கிற்கு எடுத்து வந்திருக்க வேண்டும். அப்படி எடுத்துவந்திருந்தால் சென்னை அணியால் கூடுதலாக 20 ரன்களை அடித்திருக்க முடியும்.

ருதுராஜ்
ருதுராஜ்

அதேபோல ஆடுகளமானது மெதுவாக பந்துவீசும் பவுலர்களுக்கு சாதகமாக இருந்த நிலையில், ஷர்துல் தாக்கூரை இம்பேக்ட் வீரராக அணியில் எடுத்திருக்க வேண்டும். அபிஷேக் சர்மாவிற்கு எதிராக சிறந்த விக்கெட் ரேட் வைத்திருக்கும் ஷர்துல் தாக்கூர், பொதுவாகவே ஸ்லோ பிட்ச்சில் சிறப்பாக வீசக்கூடியவர். அதேபோல பந்தை மெதுவாக காற்றில் வீசும் ஸ்பின்னரான மொயின் அலியை பவர்பிளேவிலேயே பயன்படுத்தியிருக்க வேண்டும். சிஎஸ்கே அணியின் பிக் ஆஃப் தி டே பவுலராக மொயின் அலியே இன்று ஜொலித்தார்.

srh vs csk
டெல்லி அணிக்கு பெரிய அடி.. குல்தீப் யாதவ் விளையாடுவதில் சிக்கல்! 2024 IPL-ல் இருந்து வெளியேறுகிறாரா?

தோனிக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய செக்!

இதுஎல்லாவற்றையும் தாண்டி கடந்த 2022-ம் ஆண்டு கேப்டனாக இருந்த ரவிந்திர ஜடேஜாவுக்கு பெரிய பாதகமாக அமைந்தது, சென்னையை தாண்டியிருந்த வெளி ஆடுகளங்கள் தான். பெரும்பாலும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளை மும்பை மற்றும் புனே போன்ற வெளி ஆடுகளங்களில் தான் விளையாடியது. அதனாலேயே ஜடேஜாவால் கேப்டன்சியில் ஜொலிக்க முடியாமல் போனது. ஒருவேளை சென்னை சேப்பாக்கத்தில் நிறைய போட்டிகள் நடந்திருந்தால், ஜடேஜாவும் கேப்டன்சியில் மிளிர்ந்திருப்பார்.

தோனி
தோனி

தற்போது ஜடேஜாவை போலவே ருதுராஜும் அவே ஆடுகளங்களில் கேப்டன்சியில் சொதப்பிவருகிறார். அவரால் வெளி ஆடுகளத்திற்கு தகுந்தார்போலான முடிவுகளையும், ஆடுகளத்தின் தன்மை எப்படியிருக்கிறது என்று போட்டியின் போதே புரிந்துகொள்ளவும் முடியாமல் போகிறது. ஜடேஜாவை போல ருதுராஜுன் நிலைமையும் மாறிவிடக்கூடாது என்பதில் சிஎஸ்கே மற்றும் தோனி இரண்டு தரப்பும் கவனமாக இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது தான் சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் மிகப்பெரிய செக் வைக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் அடுத்தடுத்த போட்டிகளில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

srh vs csk
MI விட்டு வெளியேறும் எண்ணத்தில் ரோகித்; Hardik-க்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை! தொடரும் பிரச்னை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com